பிரான்ஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வயல் மாதா என அழைக்கப்படும் அமைதியின் அரசியாகிய மரியன்னை திருவிழா பணியக இயக்குனர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை மதன்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இத்திருப்பலியில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்து பத்தாயிரத்துக்கும் அதிகமான இறைமக்கள் கலந்து அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.

By admin