டென்மார்க் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மடு அன்னையின் 30வது திருப்பயண வருடாந்த திருவிழா பணியக இயக்குநர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை றெஜினோல்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 21, 22ஆம் திகதிகளில் நடைபெற்றன.

21ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை அருட்தந்தை கில்லறி வெல்லம் அவர்களின் தலைமையில் நற்கருணைவிழா திருப்பலியும் 22ஆம் திகதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு திருவிழா திருப்பலியும் தொடர்ந்து மாலை 02:30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

திருவிழா திருப்பலியை டென்மார்க் ஆயர் பேரருட்தந்தை செஸ்லாவோ கோசன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இவ்வழிபாடுகளில் டென்மார்க் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் ஏராளமான இறைமக்கள் பங்குபற்றி அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.

By admin