செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி மற்றும் தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ‘நீதியின் ஓலம் 02’ கவனயீர்ப்புப் போராட்டம் ஆவணி மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் செம்மணிபிரதேசத்தில் நடைபெற்றது.

இறுதிநாளன்று செம்மணிக்கு முன்பாக புதுக்குடியிருப்பு ஜெயம் நாடாக கல்லூரியினரின் ‘செம்மணியில் எம் கண்மணிகள்’ வீதி நாடகமும், யாழ்ப்பாணம் பொது நூலகத்திலிருந்து கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் பிரதிநிதியின் தூதரகம் வரையிலான பேரணியும் நடைபெற்றது.

தழிழர்களுக்கெதிரான இனப்படுகொலைகள், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அசியத்தை வலியுறுத்திய மகஜர் ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சிவில் சமுக அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தென்னிலங்கையிலிருந்து வருகைதந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin