யாழ். திருமறைக்கலாமன்ற அலுவலக பணியாளர்கள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ பயணம் ஆவணி மாதம் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடைபெற்றது.
மன்ற உதவி நிர்வாக இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அங்கத்தவர்கள் புத்தளம் மாவட்டத்தை தரிசித்து கல்பிட்டி கோட்டை, தலவில புனித அன்னம்மாள் திருத்தலம், உப்பளம், அனல் மின் உற்பத்தி நிலையம், தோணிக்கல கல்வெட்டு என்பவற்றை பார்வையிட்டனர்.
அத்துடன் 19ஆம் திகதி புதன்கிழமை புத்தளம் நகர் மற்றும் கட்டைக்காடு திருமறைக்கலாமன்ற அங்கத்தவர்களுடனான கலந்துரையாடல்களில் பங்குபற்றினர்.
மன்றங்களின் இணைப்பாளர்கள் திரு. மனோ செல்வராஜ் மற்றும் வசந்தன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மன்ற செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

