இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான விடுமுறைக்கால சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 15,16ஆம் திகதிகளில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனி வின்சன் சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரன் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதல்நாளில் செபமாலைத் தியானம், ஆன்மீக உரை, நற்கருணை வழிபாடு என்பனவும் இரண்டாம் நாளில் தலைமைத்துவம், சகோதர உறவு தொடர்பான கருத்தமர்வு, விளையாட்டு கலைநிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 80 மறைக்கல்வி மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
அத்துடன் பீடப்பணியாளர்களின் பாதுகாவலர் புனித ஞானப்பிரகாசர் திருவிழாவை சிறப்பித்து முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு ஆவணி மாதம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் காலை வெளிக்கள பயணம், பீடப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடல், விருந்துபசாரம் என்பவற்றுடன் மாலை உதைபந்தாட்ட போட்டி கலைநிகழ்வுகள் மற்றும் உதைப்பந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் 22 பீடப்பணியாளர்கள் பங்குபற்றினர்.

