கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
01ஆம் அன்னையின் கொடியேற்றப்பட்டு 06ஆம் திகதி வியாழக்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அச்சுவேலி பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை பளை பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ஜ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
நற்கருணைவிழா அன்று அன்னையின் திருச்சொருப பவனியும் திருவிழா திருப்பலி நிறைவில் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

