மானிப்பாய் பங்கின் கட்டுடை மடுமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பரமதாஸ் பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
13ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 15ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா மற்றும் நற்கருணைவிழா திருப்பலிகளை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை ஸ்கரன்ராஜ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

