மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆடி மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி ஆவணி மாதம் 06ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழாவை சிறப்பித்து திருவிழா அன்று மாலை ஆலய டொண் பொஸ்கோ இளையோர் மன்றத்தினரால் பங்குமக்களுக்கான விளையாட்டு நிகழ்வும் தொடர்ந்து பரிசளிப்பும் இடம்பெற்றன.

அத்துடன் மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தாத்தா பாட்டியர் தின சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அருட்சகோதரி செறின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தையின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் தாத்தா பாட்டியர் பேரப்பிள்ளைகளால் மாலை அணிவிக்கப்பட்டு ஆலயத்திற்கு அழைத்துவரப்பட்டு ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலி நிறைவில் தாத்தா பாட்டிகளுக்கான கௌரவிப்பு இடம்பெற்று அன்பளிப்புக்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் 70 வயதுக்கு மேற்பட்ட 18 தாத்தா பாட்டியர் பங்குபற்றினர்.

By admin