மன்னார் பிராந்திய திருக்குடும்ப பொதுநிலையினருக்கான விழிப்புணர்வு கருத்தமர்வும் தலைமைத்துவ பயிற்சியும் ஆவணி மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை நானாட்டான் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது.

செயற்குழு தலைவர் திரு. கயித்தான் பேனாட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருக்குடும்ப கன்னியர் சபை மாகாண முதல்வி அருட்சகோதரி ஜொய்லின் ராஜி ஸ்ரான்லி, மாகாண ஆலோசகர் அருட்சகோதரி மெற்றில்டா வசந்தி, சபை திருக்குடும்ப பொதுநிலையினர் தேசிய தலைவி அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை, மற்றும் மன்னார் அகத்திமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திரு. சுதன் ஆகியோர் கலந்து கருத்துரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கியதுடன் அனுபவப்பகிர்வும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 50 வரையான திருக்குடும்ப பொதுநிலையினர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin