யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தால் யாழ். பிரதான வீதிப்பக்கம் அமைக்கப்பட்ட பாடசாலையின் பெயர் பொறித்த ஞாபகார்த்த திடல் திறப்புவிழா ஆவணி மாதம் 07ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் திரு. லெனின்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர் செபமாலைதாசர் சபை அருட்தந்தை பேடினன்ட் அவர்கள் கலந்து ஞாபகார்த்த திடலை ஆசீர்வதிக்க பாடசாலை ஒய்வு நிலை அதிபர் திருமதி சின்னத்துரை அவர்கள் அதனை திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் யாழ் கல்வி வலய பிரதிநிதி சார்பாக திரு. காந்தயுகன், விழாக் குழுத் தலைவர் திரு. தபேந்திரன். ஓய்வு நிலை கணக்காளர் திரு. கில்பேட் குணம், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்ஞாபகார்த்த திடலுக்கான நிதியுதவியை லண்டனில் வசிக்கும் பழைய மாணவி திருமதி. டயானா முரளிதரன் அவர்கள் வழங்கியிருந்ததுடன் அவரும் இதில் கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.

