தீவக மறைக்கோட்ட நீதி சமாதான ஆணைக்குழு உருவாக்கல் கூட்டம் ஆவணி மாதம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல மண்டபத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட முதல்வரும் இணைப்பாளருமான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு புதிய நிர்வாகக்குழு தெரிவும் இடம்பெற்றது.
நிர்வாகத் தெரிவில் திரு. டேவிட்சன் அவர்கள் செயலாளராகவும் திரு. ஜெனிபர் அவர்கள் உப தலைவராகவும் திருமதி யேசுதாசன் மேரி அன்ரனிற்றா றோயல் அவர்கள் உப செயலாளராகவும் திரு. டேவிட் அவர்கள் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்ட பங்கு பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
