தீவகம் அல்லைப்பிட்டி மொண்போர்ட் சர்வதேச பாடசாலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள “அருளகம்” மொண்போர்ட் அருட்சகோதரர்கள் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆவணி மாதம் 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய இல்லத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
இந்நிகழ்வில் உரோமை நகர் புனித கபிரியேலின் மொண்போர்ட் சபை துணைத்தலைவர் அருட்சகோதரர் பிரதாப் ரெட்டி, சபை திருச்சி மாகாண முதல்வர் அருட்சகோதரர் ஜோண் பிரிட்டோ, சபை திருச்சி மாகாண உறுப்பினர் அருட்சகோதரர் மரிய பிரகாசம், தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க், அருட்தந்தையர்கள், குளுனி அருட்சகோதரிகள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

