யாழ். அகவொளி உள ஆற்றுப்படுத்தல் நிலையத்தினால் கிளிநொச்சி வேம்பொடுகேணி இலங்கைத் திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் 6-11ஆம் தர மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட உள ஆற்றுப்படுத்தல் செயலமர்வு ஆவணி மாதம் 06ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் திரு. வினோதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி இயக்குநர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அகவொளி குடும்பநல நிலைய உதவி இயக்குநர் அருட்தந்தை ஜெராட், உடுவில் – மல்வம் பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற், திருமதி நித்தினா அகியோர் வளவாளர்களாக கலந்து ஒழுக்கமும் அடிப்படை நன்னடத்தையும்: மரியாதை, பொறுப்புணர்வு மற்றும் நேர்மறை நடத்தை: சுய ஒழுக்கமும் தனி மனித வளர்ச்சியும்: தலைமைத்துவம், ஆளுமை மற்றும் சமூக நன்னடத்தை: ஒழுக்கத்தை மேம்படுத்தல் மனநல நலனைக் காத்தல் மற்றும் மீளெழும் திறனை வளர்த்தல்: நேர்மறை ஒழுக்கம் மற்றும் நேர்மறை நடத்தையின் மூலம் மாணவர்களை வழிநடத்துதல் போன்ற தலைப்புக்களின் கீழ் மாணவர்களையும் ஆசிரியர்களையும் வழிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 105 மாணவர்களும் 20 ஆசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin