யாழ். புனித மரியன்னை பேராலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.
06ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி வியாழக்கிழமை செபமாலை பேரணியும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழாவும் இடம்பெற்றன.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

