எழுவைதீவு புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

06ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கிளறேசியன் சபை அருட்தந்தை இருதயராஜ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin