மன்னார் முருங்கன் டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலை மாணவர்களின் இரண்டாம் தவணை விடுமுறையை பயனுள்ளதாகவும் மகிழ்ச்சிகரமாகவும் மாற்றும் வகையில் முன்னெடுக்கப்பட்ட ‘கோடைகால சிறப்பு முகாம்’ ஆவணி மாதம் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி 08ஆம் திகதி சனிக்கிழமை வரை அங்கு நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை பிரியங்கன் மார்க் அவர்களின் தலைமையில் அருட்சகோதரர்கள் அகில, ஆகாஸ் மற்றும் பாடசாலைச் சமூகத்தினரின் ஒழுங்குபடுத்தலில் ‘வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்’ எனும் கருப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அறிவு, திறன், படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பண்புகளை மேம்படுத்தும் விளையாட்டுகள், வங்காலை கடற்கரையில் பட்டம் ஏற்றுதல், புதையல் வேட்டை, வேட்டையாடு விளையாடு, தீப்பாசறை போன்றவையும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

