சிலாபம் தலவில புனித அன்னம்மாள் திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெயந்த பெரேரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆடி மாதம் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி ஆவணி மாதம் 01ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை சிலாபம் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை விமல் ஸ்ரீ ஜெயசூர்ய அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா திருப்பலியில் திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை ஆண்ட்ரே ஜொஸ்வோவிஜ், யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நிஸாந்த சாகர ஜெயமான்ன ஆகியோர் இணைந்து செபித்தனர்.

