யாழ். மறைமாவட்ட குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன.
அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்கள் கரித்தாஸ் வன்னி கியூடெக் இயக்குநராகவும் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்கள் கனடா மொன்றியல் பணியக இயக்குநராகவும் அருட்தந்தை ஸ்கரன்ராஜ் அவர்கள் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநராகவும் அருட்தந்தை எரோணியஸ் அவர்கள் நோர்வே பேர்கண் பணியக இயக்குநராகவும் அருட்தந்தை ஞானறூபன் அவர்கள் நோர்வே ஒஸ்லோ பணியக இயக்குநராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.
அத்துடன் அருட்தந்தை ஜோதிநாதன் அவர்கள் இரணைமாதாநகர் செபமாலை அன்னை ஆலய பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை பிறாயன் அவர்கள் சக்கோட்டை பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை செபஜீவன் அவர்கள் மாரீசன்கூடல் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை சுதர்சன் அவர்கள் பலாலி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்கள் மல்வம் – உடுவில் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை யூட் ஹெமில்ரன் அவர்கள் ஊறணி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை தயதீபன் அவர்கள் வலைப்பாடு பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை கிறிஸ்ரி ஞானராஜ் றொகான் அவர்கள் முல்லைத்தீவு உதவிப்பங்குத்தந்தையாகவும் நியமனம் பெற்றுள்ளனர்.
