மிருசுவில் புனித நீக்கிலார் ஆலய இளைஞர் கழகத்தின் சமூக நலதிட்டங்களின் ஒரு பகுதியாக, மிருசுவில் கிராமத்தின் சூழலை பாதுகாக்கும் பிளாஸ்ரிக் இல்லா முன்முயற்சி Zero Plastic Initiative செயற்திட்டம் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மிருசுவில் கிராமத்தை பிளாஸ்ரிக் கழிவுகளிலிருந்து சுத்தப்படுத்தி பிளாஸ்ரிக் பாவனை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்திட்டத்தின் முதற்கட்டமாக அன்றைய தினம் மிருசுவில் புகையிரத நிலையப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது.
பிளாஸ்ரிக் போத்தல்கள், கண்ணாடி போத்தல்கள் குளிர்பான ரின்கள் மற்றும் கேன்கள் , பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் உறைகள் உட்பட 47 கிலோகிராம் நிறையுள்ள கழிவுகள் சேகரிக்கப்பட்டன.
இச்செயற்திட்டத்தின் அடுத்த செயற்பாடாக எதிர்வரும் காலங்களில் பிளாஸ்ரிக் போத்தல்களை தனியாக சேகரிப்பதற்கான சேகரிப்பு தொட்டிகளை நிறுவுவதுடன் விழிப்புணர்வு செயற்பாடுகளை நடாத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

