திருச்சிலுவை கன்னியர்களால் நடாத்தப்படும் திருச்சிலுவை தாதியர் நிலையத்தில் தாதியர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் மற்றும் தாதியர் தொப்பி வழங்கும் நிகழ்வு ஆடி மாதம் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிலைய பொறுப்பாளர் அருட்சகோதரி ஜெரால்டின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூன்று ஆண்டு கால தாதியியல் டிப்ளோமாவை நிறைவு செய்த 12 மாணவர்கள், தாதிய உதவியாளர் கற்கைநெறியை பூர்த்தி செய்த 13 மாணவர்கள் ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் 19 தாதிய மாணவர்களுக்கு தாதியர் தொப்பியும் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், தாதிய மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin