புனரமைப்பு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் கொக்குவில் புனித சின்னப்பர் ஆலய திறப்புவிழாவும் நூற்றாண்டு திருவிழாவும் ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை மைக் டொனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புனரமைக்கப்பட்ட ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
ஆலய திருவிழாவிற்கான ஆயத்தநாள் வழிபாடுகள் 22ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ராஜ் கிளேயர் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

