போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி மேரி ஈவோன் சிமியோன் அவர்கள் ஆடி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
1961ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றிய இவர், 65 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து சமூக, பங்கு, மற்றும் மறைக்கல்வி தையல் பணிகளுடன் குழுத்தலைவியாகவும், விடுதி மற்றும் ஆதரவற்றோர் இல்ல பொறுப்பாளராகவும், வயது முதிர்ந்த அருட்சகோதரிகள் பராமரிப்பாளராகவும், மாகாண இல்ல வரவேற்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரின் பணிவாழ்விற்காக நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin