கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மறைமாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட தரம் 04 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களுக்கான தேசியமட்ட திருவிவிலிய அறிவுத்தேர்வு 25ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்டத்தில் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, அல்லைப்பிட்டி மொண்பேட் சர்வதேச பாடசாலை, நெடுந்தீவு றோ.க மகளிர் கல்லூரி, மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த பாடசாலை, இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலயம், இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி, பருத்தித்துறை சென். தோமஸ் றோ.க பெண்கள் பாடசாலை, பளை மத்திய கல்லூரி, கிளிநொச்சி. சென். திரேசாள் மகளிர் கல்லூரி, இரணைதீவு றோ.க.த.க பாடசாலை, முல்லைத்தீவு மகாவித்தியாலயம், புதுக்குடியிருப்பு றோ.க பாடசாலை ஆகிய 12 நிலையங்களில் நடைபெற்ற இப்பரீட்சையில் மறைமாவட்ட பரீட்சையில் சிறந்த சித்திபெற்ற 2480 வரையான மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

