தொடர்பாடலாண்டு சிறப்பு நிகழ்வாக பருத்தித்துறை மறைக்கோட்ட இளையோர் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பருத்தித்துறை மறைக்கோட்ட ஊடக இணைப்பாளர் அருட்தந்தை றொக் பஸ்ரியன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடகமைய இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் மற்றும் யாழ். திருமறைக்கலாமன்ற கலைஞர் திரு. ஜெகன் கரன்சன் ஆகியோர் கலந்து கருத்துரைகள், விளையாட்டுக்கள், கலந்துரையாடல், விழிப்புணர்வு பட காட்சிப்படுத்தல் என்பவற்றின் ஊடாக பங்கேற்பாளர்களை வழிப்படுத்தினர்.
பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன், யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோண் குருஸ், கரவெட்டி பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் 60க்கும் அதிகமான இளையோர் மற்றும் மறையாசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

