இலங்கை மருத்துவ கல்லூரி சமூகத்தினரினால் மாவட்ட ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட வினாடி வினாப் போட்டியின் யாழ்ப்பாண மாவட்ட போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு ஆடி மாதம் 21ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இப்போட்டியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஒன்பது பாடசாலைகள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் ஜோஸின் கிறிஸ்ரோ அவர்கள் இலங்கை சாரணர் இயக்கத்தின் மிக உயர்ந்த விருதான ஜனாதிபதி சாரணர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

