யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட பொதுநிலையினர் மாநாடு ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. அருள் ஜெகின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து பேராலய ஆயர் யஸ்ரின் மண்டபத்தில் மாநாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கடந்த ஆண்டிற்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்களின் “சமகால அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளும் கிறிஸ்தவ வாழ்வியல்களும்” என்னும் தலைப்பிலான சிறப்புரையும், சமூக தொடர்பாடல் ஆண்டை சிறப்பித்து யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையம் மற்றும் பாதுகாவலன் பத்திரிக்கை ஆகியவற்றிற்கான கௌரவிப்பும் நடைபெற்றன.
இக்கௌரவிப்புக்களை பாதுகாவலன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் வளனார் அச்சக முiகாமையாளருமான அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களும் மறைநதி கத்தோலிக்க ஊடக மைய பணியாளரான செல்வி டிலாணி எட்வேட்நாதன் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் மன்னார் மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் மற்றும் அருட்தந்தை ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

