மல்வம் திருக்குடும்ப ஆலய நூற்றாண்டு நினைவாக ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த பங்குப்பணிமனை திறப்புவிழா ஆடி மாதம் 01ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து பங்குப்பணிமனையை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
இப்பங்குப்பணிமனைக்கான அடிக்கல் 2025ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ஆம் திகதி அப்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் பணிக்காலத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களால் நாட்டப்பட்டது.
இதற்கான நிதி அனுசரணையை உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் பங்குமக்கள் வழங்கியிருந்தார்கள்.

