யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம் ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட பொது நிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. ஜெகின் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுநிலையினர் கழக நிதி சேகரிப்பு, கழக வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் மறைக்கோட்டங்களின் பொதுநிலையினர் கழக நிர்வாகத் தெரிவு தொடர்பான கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் மறைமாவட்ட பக்தி சபை பிரதிநிதிகள், மறைக்கோட்ட பிரதிநிதிகளென 25 வரையானவர்கள் கலந்துகொண்டனர்.

