யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் முதல்நன்மை அருட்சாதனத்திற்காக தயார்ப்படுத்தப்பட்டுவரும் சிறார்களுக்கான பாசறை நிகழ்வு ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.

பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறையாசிரியர் தலைவர் திரு. அன்ரனி ஜான்கவி மற்றும் இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர் செயலாளர் திரு. மகாலிங்கம் நெல்சன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள், கருத்துரைகள் என்பவற்றின் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 107 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin