எழுவைதீவு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் எழுவைதீவு புனித தோமையார் ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் 09 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

திருப்பலி நிறைவில் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட செபமாலை தோட்டமும் முதல்நன்மைபெற்ற சிறார்களால் திறந்துவைக்கப்பட்டது.

By admin