மாணவர்களின் அறிவியல், கலை, கைவினை மற்றும் ஆக்கத்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட நவீன மற்றும் புத்தாக்க கண்காட்சி ஆனி மாதம் 23,24,25ஆம் திகதிகளில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் ரோய் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட நவீன கண்டுபிடிப்புகள், காட்சிப்பொருட்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் கல்விசார் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இக்கண்காட்சியை 13ற்கும் அதிகமான அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் நலன்விரும்பிகள், பெற்றோர்களென பலரும் பார்வையிட்டனர்.

By admin