யாழ். செட்டித்தெரு மெதடிஸ்ட் மிஸன் பாடசாலை ஒளிவிழா மார்கழி மாதம் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திரு. சசிகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலய உதவி பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

By admin