மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் வவுனியா மறைக்கோட்ட மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களின் ‘மகத்தான மானுடம்’ என்ற சுற்றுமடல் விளக்க கருத்தமர்வு ஆடி மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை கிருஸாந்த் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய மேய்ப்புப்பணி மண்டபத்தில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் வவுனியா மறைக்கோட்ட முதல்வரும் வவுனியா பங்குத்தந்தையுமான அருட்தந்தை விக்டர் சோசை அவர்கள் கலந்து ‘மகத்தான மானுடம்’ சுற்றுமடல் பற்றிய விளக்கவுரையை வழங்கினார்.

இந்நிகழ்வில் 70 மறையாசிரியர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin