மிருசுவில் பங்கின் கிளாலி புனித யாகப்பர் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ளு.து.ஞ. ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

16ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 23ஆம் திகதி வியாழக்கிழமை காலை புதிய சித்திரத் தேர் ஆசீர்வதிப்பும் அதன் வெள்ளோட்டமும் சிறப்பு மலர் வெளியீடும் 24ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நற்கருணைவிழாவும் இடம்பெற்றன. புதிய தேரை பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை கிருபாகரன் அவர்கள் ஆசீர்வதித்தார்.

திருவிழா திருப்பலியை அச்சுவேலிப் பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர். நற்கருணை ஆரதனையைத் தொடர்ந்து திருச்சொருப தேர்ப்பவனியும் இடம்பெற்றது.

By admin