குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 25ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

16ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலி நிறைவில் புதிதாக நிறுவப்பட்ட கொடிக்கம்ப நினைவுமலரும் அதற்கான நினைவுக்கல் திரைநீக்கமும் இடம்பெற்றன. யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்கள் நினைவுமலரை வெளியிட்டுவைத்து நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்துவைத்தார்.

அன்று மாலை குருநகர் பிரதேசத்தை வலம்வரும் புனிதரின் திருச்சொருப தேர்ப்பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

 

By admin