அளம்பில், உடுப்புக்குளம், தூண்டாய் புனித செபமாலை அன்னை ஆலய வருடாந்த திருவிழா ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிறுக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும்; நற்கருணை விழாதிருப்பலியை முல்லை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

நற்கருணைவிழா திருப்பலியில் 3 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தையும் பெற்றுக்கொண்டதுடன் திருவிழா திருப்பலி நிறைவில் ஆலய முன்வளாகத்திலே கடற்கரை பக்கமாக கடற்தொழில் செய்பவர்கள் இறைவேண்டல் செய்ய வரவேற்புமாதா சுரூபமும் ஸ்தாபித்து வைக்கப்பட்டது.

தூண்டாய் ஆலய திருஅவையில் தற்போது இடம்பெற்ற இத்திருவிழா முதல் திருவிழாவென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin