நாரந்தனை திரு இருதய ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக்கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை கரம்பொன் பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

