சுன்னாகம், சூராவத்தை புனித திரேசாள் ஆலய ஆசையப்பா ஞாபகார்த்த ஜொனியன்ஸ் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித திரேசாள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்பள்ளி நிர்வாகத்தினரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இச்சந்தை நிகழ்வை பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.
இந்நிகழ்வில் சிறார்களால் உணவுப்பொருட்கள், சிற்றூண்டிகள், மரக்கறி, பழங்கள், விளையாட்டுப் பொருட்கள், அழகுசாதன பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்பட்டன.
பெற்றோர்கள், முன்பள்ளி சிறார்கள், பங்குமக்கள், நலன்விரும்பிகளென பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

