யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு கூட்டம் ஆவணி மாதம் 08ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் நiபெற்ற இக்கூட்டத்தில் வார்த்தை வழிபாடு, புதிய உறுப்பினர்களுக்கான வரவேற்பு, மறைக்கோட்டங்களின் அறிக்கை சமர்ப்பிப்பு, ஆணைக்குழுவின் கடந்தகால, எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் என்பன இடம்பெற்றன.

இந்நிகழ்வில் மறைக்கோட்ட இணைப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

By admin