யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வின்சென்டி போல் பந்தி பொதுக்கூட்டம் ஆவணி மாதம் 08ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சபை தலைவி திருமதி விமலா இராஜேஸ்வரி யஸ்ரின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடந்த ஆண்டறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடல் இடம்பெற்றது.
தொடர்ந்து ஆலய வின்சென் டி போல் சபையினரால் சபையின் செயற்பாடுகள் பற்றிய நாடகமும் ஆற்றுகைசெய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் சென். மேரிஸ் வித்தியாலய அதிபர் திரு. கெனத் மேரியன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட வின்சென்டி போல் ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை நேசநாயகம், மத்திய சபை தலைவி திருமதி மரியநாயகி, அருட்தந்தை ஸ்கரன்ராஜ், மறைமாவட்ட வின்சன்டி போல் சபை அங்கத்தவர்கள், ஏனைய பந்திகளின் அங்கத்தவர்கள் மற்றும் பங்கின் பக்திச்சபை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

