மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையின் சுகாதார மேம்பாட்டு நிகழ்ச்சி திட்ட செயற்பாடுகளை மேற்பார்வை செய்யும் முகமாக இலங்கை சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஆவணி மாதம் 05ஆம் திகதி கடந்த புதன்கிழமை பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர்.

இவ்விஜயத்தின் போது பாடசாலையில் முன்னெடுக்கப்படும் சுகாதார மேம்பாட்டு செயற்பாடுகளான சுகாதார கழக உருவாக்கம், சுகாதார மேம்பாட்டு குழு உருவாக்கம், டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள், தனிநபர் சுகாதார கண்காணிப்பு, தியானம், உள விழிப்புணர்வு, யோகா, சத்துணவு வழங்கும் முறைகள், பொலித்தீன், பிளாஸ்ரிக், செயற்கை பசளைகளின் தடை, ஆலோசனை வழிகாட்டல் போன்ற விடயங்கள் பற்றிய செயற்பாடுகளும் அறிக்கைகளும் பார்வையிடப்பட்டன.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணிப்பாளர், பாடசாலை சுகாதார அலகு பணிப்பாளர் தலைமையிலான குழுவினர், மாகாண பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் மற்றும் மாவட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

By admin