சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பொஸ்னியா நாட்டில் அமைந்துள்ள மெஜகோரி அன்னை திருத்தலம் நோக்கிய திருப்பயணம் சித்திரை மாதம் 06ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி சனிக்கிழமை வரை நடைபெற்றது.
சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்தந்தை ஸ்கரன்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்திருயாத்திரையில் நற்கருணை வழிபாடு, மரியன்னை காட்சி கொடுத்த மலை தரிசிப்பு, சிலுவை மலை தரிசிப்பு, ஆலய தரிசிப்புக்கள், சிறப்பு திருப்பலி என்பன இடம்பெற்றன.
இவ்யாத்திரையில் சுவிஸ் தமிழ் ஆன்மீக பணியகத்தை சேர்ந்த 90 வரையான இறைமக்கள் பங்குபற்றினர்.

