நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் முன்னெடுக்கும் மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 28ஆவது தமிழர் திருயாத்திரை வைகாசி 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதென நெதர்லாந்து ஆன்மீக பணியகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அன்றைய தினம் காலை திருகோணமலை மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை போல் றொபின்சன் அவர்களின் குணமளிக்கும் நற்கருணை ஆராதனையும் மதியம் புனித நீரூற்றை நோக்கிய பவனியும் மருதமடு அன்னையின் சிற்றாலயத்தில் வழிபாடும் இடம்பெறவுள்ளதுடன் தொடர்ந்து மாலை திருவிழா திருப்பலியும் நடைபெறவுள்ளன.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுக்கவுள்ளார்.

அத்துடன் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை பெனு அன்னை காட்சி கொடுத்த சிற்றாலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து இளையோருக்கான ஆராதனையும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு நெதர்லாந்து ஆன்மீக பணியகத்தினர் புலம்பெயர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

 

By admin