மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட இளையோர் ஒன்றுகூடல் சித்திரை மாதம் 18,19ஆம் திகதிகளில் வங்காலை புனித அன்னாள் ஆலயத்தில் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை இராசாநந்தம் நீக்ளஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 18ஆம் திகதி சனிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நற்கருணை வழிபாடு, மாதாந்தகூட்டம், கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
தொடர்ந்து 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருப்பலியும் மறைக்கோட்டங்களின் இளையோருடனான கலந்துரையாடலும் விளையாட்டுக்களும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை நியூட்டன், அருட்சகோதரிகள், மறைமாவட்ட நிர்வாக உறுப்பினர்கள், பங்கு பிரதிநிதிகள், வங்காலை பங்கு இளையோரென 80ற்கும் அதிகமானோர் பங்குபற்றியிருந்தனர்.

