புனித யோசெவ்வாஸ் அருட்சகோதரிகளின் நித்திய அர்ப்பண நிகழ்வு புரட்டாதி மாதம் 05ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மன்னார் மறைமாவட்டத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் பேசாலை புனித வெற்றிநாயகி அன்னை ஆலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் அருட்சகோதரிகள் மேரி நிரஞ்சினி பெனாண்டோ, யான் புளோரில்டா பத்திநாதன், சியாமி ரம்யா மிராண்டா பேரின்பநாதன், ஜூலியட் மேரி ஆரோக்கியசாமி, மேரி அன்ஸியா செல்லப்பர் ஆகியோர் தமது நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டை நிறைவேற்றினர்.

