மன்னார் மறைமாவட்டம் உதயமானதன் 50ஆவது ஆண்டு ஜூபிலி 2031ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், ஐந்தாண்டு ஆயத்த தியானத்தின் முதல்கட்டமாக முருங்கன் மறைக்கோட்ட புதுப்பித்தல் தியானத்திற்கான முன் ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது.
புரட்டாதி மாதம் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நானாட்டன் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்ற இக்கூட்டம், முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனோ அலெக்ஸான்டர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில், மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, முருங்கன் மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதுப்பித்தல் தியானத்தின் ஏற்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன், மறைக்கோட்ட அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

