இந்தியாவிலிருந்து வருகைதந்து புலோப்பளை பங்கில் தமது பணிகளை ஆரம்பித்துள்ள வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளின் இல்ல திறப்புவிழா சித்திரை மாதம் 21ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பளை பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து இல்லத்தை ஆசீர்வதிக்க சபை தலைமை அருட்சகோதரி டெக்லா மேரி அவர்கள் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், அருட்தந்தையர்கள் மற்றும் பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.

By admin