பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் மக்களின் பிரசித்தி பெற்ற மரியன்னையின் திருத்தலமாகிய வோல்சிங்கம் மாதா திருத்தல ஆடி மாத திருவிழா பிரித்தானிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குனர் அருட்தந்தை எல்மோ அருள்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

பிரித்தானியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான கத்தோலிக்க, கிறிஸ்தவ, இந்து சமய மக்கள் ஒன்றுகூடி அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.

By admin