மன்னார் மறைமாவட்டம் முருங்கன் கிறிஸ்து அரசர் பாலர் பாடசாலை சிறார்களின் சந்தை நிகழ்வு ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை பொறுப்பாளர் அருட்சகோதரி அனுசியா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களால் காலை உணவு, மரக்கறிகள், பழவகைகள், சிறுதானியப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், வர்ண வளர்ப்பு மீன்கள் மற்றும் சிற்றூண்டிகள் உட்பட பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் முருங்கன் பங்குத்தந்தை அருட்தந்தை ராஜநாயகம், அருட்தந்தையர்கள், கார்மேல் சபை அருட்சகோதரிகள், பங்கு மக்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் முருங்கன் பங்கில் பணியாற்றும் கார்மேல் சபை அருட்சகோதரிகளால் முன்னெடுக்கப்பட்ட புனித கார்மேல் அன்னை திருவிழா ஆடி மாதம் 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
முருங்கன் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை ராஜநாயகம் அவர்களின் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இத்திருப்பலியில் கார்மேல் சபை விடுதி மாணவர்கள் மற்றும் இறைமக்கள் பங்குபற்றினர்.

