நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
20ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி செவ்வாய்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

